பள்ளபட்டியிலிருந்து புயல் நிவாரண பொருட்கள் – இரண்டாவது லோடு சென்றது.

198 Views

பள்ளபட்டியில் மக்கள் தொடர்பாக செயல்படும் பாப்புலர் எக்ஸ்பிரஸ் வாட்ஸ்அப் தளம் மற்றும் இணையதள நண்பர்கள் சார்பாக பல சமூக சேவைகள் செய்து வருகின்றார்கள். குறிப்பாக இயற்கை பேரிடர் காலங்களில் இவர்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் பேருதவி புரிவதாக இருக்கும்.

இவர்களின் பணிகளில் முக்கியமானதாக தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெய்த புயல் மழையால் சேதமுற்ற மக்களுக்கு உதவுவதற்காக வாட்ஸ்அப் தளங்களில் உதவிக் கோரிக்கை வைத்து அதன் மூலம் பெறப்பட்ட நிதி மற்றும் பொருளை கொண்ட சுமார் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பார்சல்கள் இன்று இரண்டாவது முறையாக திருநெல்வேலி சென்றது.

இந்தப் பார்சல்களில் அரிசி, கோதுமை, மைதா, ரவை, சேமியா, அலுமினிய பாத்திரங்கள், எவர்சில்வர் ஸ்டீல் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பக்கெட், பிளாஸ்டிக் குடங்கள், பிஸ்கட்ஸ், பிரட், புதிய துணி வகைகள், பிளாஸ்டிக் மேட், இன்னும் எண்ணற்ற 25 கிலோ அரிசி சிப்பங்களுடனும் 140 ஐந்து கிலோ அரிசி + 140 ஆயில் பாக்கெட்டுகள் கொண்டதாக இருந்தது.

ஏற்கனவே இவர்கள் சுமார் முன்று லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. பாப்புலர் அபுதாஹிர் மற்றும் கெந்தப்பொடி சித்திக் உள்ளிட்ட பள்ளபட்டி நண்பர்கள் முன்னின்று இதனை மேற்கொண்டனர்

Share this article:
Previous Post: மக்கள் முதல்வர் திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்திட்ட உதவி நிகழ்ச்சி நிரல்

December 21, 2023 - In News

Next Post: அரவக்குறிச்சியில் உதயமானது ரோட்டரி சங்கம்

December 24, 2023 - In Events

Leave a Reply

Your email address will not be published.