அரவக்குறிச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம். புதிதாக ரவுண்டானா வருகின்றது.

89 Views

அரவக்குறிச்சி பள்ளபட்டி முக்கிய சாலையில் புங்கம்பாடி கார்னர் பகுதி எப்போதும் போக்குவரத்துக்கு மிகவும் இடையூராக காட்சியளிக்கும். திருவிழாக்காலங்களில் இந்த இடத்தை கடப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாக இருக்கும். முக்கியமாக பெரிய வண்டிகள் புங்கம்பாடி பிரிவில் திருப்புவது என்பது வாகன ஓட்டிகளுக்கு சாகசப் பயணமாகவே இருக்கும்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அதிகாரிகள் அரவக்குறிச்சி பேருந்து நிலையம் பகுதியிலிருந்து புங்கம்பாடி கார்னர் வரை சாலையை அளந்து குறியீடு செய்து வந்தனர்.

இன்று காலை முதல் கடை உரிமையாளர்கள் தாங்கள் கடைக்கு முன்பு போட்டிருந்த பந்தல்கள், டேபிள்கள், விற்பனை பொருட்கள், பெயர் பலகைகள் போன்றவற்றை அகற்றினர். இதனால் அப்பகுதியே வித்தியாசமாகவும் விரிவாகவும் காட்சியளிக்கிறது.

தற்போது புங்கம்பாடி கார்னரை பார்க்கும் போது மிகவும் அகலமாகவும் அழகாவும் உள்ளது.

இது ஏதோ தற்காலிக நிவாரனமாக இல்லாமல் நிரந்தர கட்டமைப்பாக இருக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாகும்.

Share this article:
Previous Post: சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

December 19, 2023 - In News

Next Post: V.M. சாகுல் ஹமீது இறப்பு

December 20, 2023 - In Death News

Leave a Reply

Your email address will not be published.