தண்ணீர் தட்டுப்பாடு

அரவக்குறிச்சி தொகுதியின் முக்கிய நீர் ஆதாரமான அமராவதி ஆறு, மணல் திருட்டால் கடும் சிதைவுக்கு உள்ளாகியுள்ளதால் குடிநீர் மற்றும் வேளாண்மை ஆகிய இரண்டு தேவைகளுக்கும் பெரும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

அந்த திட்டத்தின் மூலம் தற்போது முழுமையாக தண்ணீர் கிடைக்கிறதா என்றால் இல்லை என்று சொல்கிறார்கள்.


காரணம், இந்த குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு நீண்ட காலமாக ஆகிவிட்டது. தற்போது அந்த குழாய்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் தண்ணீர் வீணாகிறது. ஆகையால் புதிய குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டு வர புதிதாக ரூ. 250 கோடியில் புதிய திட்டத்திற்கு பூமி பூஜை போட்டு இருக்கிறார்கள்.

அந்த திட்டத்தை கைவிடாமல் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்த திட்டம் நிறைவேற்றினால் குடிநீர் பிரச்னை இருக்காது என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

மேலும், வேலாயுதபாளையம், புகலூர் அருகே காவேரி ஆற்றின் குறுக்கே ரூ. 450 கோடியில் கதவணையுடன் கூடிய மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை தடுக்காமல் நிறைவேற்றினால் சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகள் மட்டுமல்லாது, அதனை சுற்றியுள்ள கிராமபுற மக்களும் குடிநீர் பிரச்னையில் இருந்து மீள்வார்கள்.

இதுபோன்ற தண்ணீர் பிரச்சனையை நன்கு அறிவேன். நான் கொடுக்கும் வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன். அதேபோன்றுதான் தண்ணீர் பிரச்சனையும்.