தடுப்பணை

சில ஆண்டுகளுக்கு முன்புவரை நெல், வாழை, சிறு தானியங்கள் என பலதரப்பட்ட பயிர்களை விவசாயம் செய்து வந்த அரவக்குறிச்சி பகுதி விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் தற்போது தண்ணீர் தேவை குறைவாக உள்ள கலப்புப் பயிரான செடிமுருங்கைக்கு மாறியுள்ளனர். ஆனாலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவாக உள்ளது.

இந்தநிலையில் வேளாண் பிரச்னைகளுக்குப் போதிய மாற்றுத் தீர்வு கிடைக்கவில்லை என்றும், நலிந்துவரும் விசைத் தறி தொழிலில் இருந்து ஏற்கெனவே வேலை செய்துவந்த தொழிலாளர்களே வெளியேறி வரும் சூழலில், வேளாண் தொழிலில் இருந்து வெளியேறிய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக பக்கத்து ஊர்களுக்குப் பயணித்து பஞ்சாலைகளிலும் தொழில் நிறுவனங்களிலும் பணியாற்ற வேண்டிய நிலை உருவாகி உள்ளது.


அமராவதி ஆற்றில் தடுப்பணைகளை ஏற்படுத்தி பாசன வசதி ஏற்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும், நங்காஞ்சி ஆற்றினை தூர்வாரி அதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கலாம் என்றும் அரவக்குறிச்சி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், அரவக்குறிச்சி தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ள. அதனையும் நிறைவேற்றி தருவேன்.